ஏப்ரல் 02, டோக்கியோ (World News): ஜப்பான் நாட்டில் நேற்று நள்ளிரவு 12.59 மணியளவில் வடக்கே உள்ள இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் கடுமையான நிலநடுக்கம் நிலவியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகிய பதிவாகியுள்ளது. Husband Killed His Sons And Suicide: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவி; மகன்களை கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
மேலும், குறிப்பிட்டுள்ள மாகாணங்களின் வடகடலோர பகுதிகளில் மையம் கொண்டிருப்பதாக ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் (Japan Meteorological Agency) தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்தவித சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலநடுகத்தினால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் உள்ளிட்ட எந்தவிதமான விபரங்களும் அறிவிக்கப்படவில்லை.