Suicide File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, கோலார் (Karnataka News): கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் சீனவாசப்பூர் தாலுகாவில் உள்ள சீகேஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி நாராயணசாமி (வயது 40)-லட்சுமி. இவர்களுக்கு பவன் (வயது 12), நிதின் (வயது 10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். Bus-Lorry Collision On Trichy-Chennai Highway: திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸை நொறுக்கி விட்டு ஓடிய லாரி டிரைவர்.. 2 பேர் பலி.. 12 பேர் காயம்..!

இந்நிலையில், லட்சுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதைப்பற்றி நாராயணசாமிக்கு தெரியவர அவரது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், லட்சுமி தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால், நாராயணசாமி மனஉளைச்சலுக்கு ஆளானார். திடீரென மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, மிகுந்த மனவேதனையில் இருந்த நாராயணசாமி தனது இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு (Father Kills Son And Suicide) தூக்கில் தொங்கவிட்டார். பின்னர், அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது மனைவி கள்ளத்தொடர்பில் இருந்து விட்டு விலகாததால் இரு மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.