ஆகஸ்ட் 23, கோபன்ஹேகன் (World News): ஐஸ்லாந்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை நேற்று (ஆகஸ்ட் 22) வெடித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அதன் ஆறாவது எரிமலை வெடிப்பில் (Volcano Eruption) சிவப்பு நிறத்தில் சூடான எரிமலை புகையை தெளிப்பதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்தில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 8% பேர் வசிக்கும் ரெய்க்ஜேன்ஸ் (Reykjanes) தீபகற்பத்தில் எரிமலை வெடித்து, உருகிய பாறையின் நீரூற்றுகளை கக்குகிறது. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை வெடிப்புகள் பிளவு வெடிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. Bus Crash: ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 14 இந்தியர்கள் நேபாளத்தில் பரிதாப பலி.. உருக்குலைந்த பேருந்து.!
இந்தப் பிளவின் மொத்த நீளம் சுமார் 3.9 கிமீ ஆகும். சுமார் 40 நிமிடங்களில் 1.5 கிமீ வரை பரவியுள்ளது. எரிமலைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் (IMO) இதுகுறித்த தகவலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Volcanic eruption near #Grindavik another footage, #Iceland. (August 22, 2024). #Volcano #eruption
video credit - Gisli Olafsson pic.twitter.com/vgJlyP1jIe
— mishikasingh (@mishika_singh) August 23, 2024