Nepal Bus Crash on 23 Aug 2024 (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 23, காத்மாண்டு (World News): நேபாளம் (Nepal) நாட்டில் உள்ள இமயமலையில் (The Himalayas), மலையேற்றம் மற்றும் சுற்றுலாவுக்காக பல இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், நேபாள நாட்டுக்கு ஆர்வத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் நேபாளத்துக்கு செல்ல இந்தியாவில் இருந்து தரைவழியாகவும், வான்வழி போக்குவரத்து வழியாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இதனிடையே, இன்று நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு (Pokhara to Kathmandu) நோக்கி போகராவில் இருந்து இந்திய சுற்றுலாப்பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணம் செய்துள்ளது. இந்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் ஆவார்கள். PM Modi on Ukraine: போர்ப்பதற்ற சூழ்நிலையில், உக்ரைன் மண்ணுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.! 

14 பேர் பலி என தகவல்:

இந்த பேருந்து தனஹுன் (Tanahun) மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென மசிங்கடி (Marsyangdi River) ஆற்றுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் பலியாகி இருப்பதாகவும், 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. யுபி எப்டி 7623 (UP FT 7623) என்ற பதிவெண் கொண்ட பேருந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. நேபாள இராணுவம் மற்றும் மாவட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

ஆற்றில் விழுந்த பேருந்தின் காணொளி: