ஆகஸ்ட் 14, காபூல் (Afghanistan News): ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா ஆதரவுடன், அதிபராக மவ்லாவ்னி ஹிபதுல்லாஹ் (Mawlawi Hibatullah Akhundzada) அமைத்திருந்த அரசாட்சி தலிபான்களின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டில் தலிபான்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு ஒவ்வொரு பகுதியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி, இறுதியில் காபூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்து வந்த மவ்லாவ்னி, தனது குடும்பத்துடன் சவூதி அரேபியா தப்பி சென்று அங்கு குடியமர்த்தப்பட்டார். ஆப்கானிய மண்ணில் இருந்த அமெரிக்கா & இங்கிலாந்து தலைமையிலான US & NATO படைகள் அனைத்தும் திரும்பி பெறப்பட்டன. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானின் விவகாரம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது.
ஆப்கனிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர், தங்களை அங்கீகரித்து உலக நாடுகள் உதவி செய்ய பல்வேறு கோரிக்கை வைத்து வருகின்றனர். உலக நாடுகளின் கைவிரிப்பு காரணமாக அங்கு பொருளாதாரம், பஞ்சம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. Virudhunagar Accident: ஓட்டுனரின் உறக்கத்தால் நடந்த சோகம்; சாலையோர பனைமரத்தில் மோதி 2 பெண்கள் பரிதாப பலி.!
இந்தியா உட்பட வெகுசில நாடுகளே மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், அங்கு அதிகாரத்தை கைப்பற்றிய ஆகஸ்ட் 15ம் தேதியை பொது விடுமுறையாக தலிபான் அரசு அறிவித்து இருக்கிறது.
ஆகஸ்ட் 15-ஐ விடுதலை நாள் என மேற்கோளிட்டு காண்பித்துள்ள தலிபான் அரசு, அமெரிக்க படைகளுக்கு எதிராக நடந்த போர் நிறைவு பெற்று வெற்றி கிடைத்த நாளாக ஆகஸ்ட் 15-ஐ சிறப்பிக்க அறிவுறுத்தி இருக்கிறது. இதனை முன்னிட்டு அங்கு அரசுப்பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரசீக நாட்காட்டியின் படி ஆகஸ்ட் 15-ல் (Tuesday, Asad 24, 1402) அன்று விடுதலை நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக நல அமைச்சகம் உறுதி செய்துள்ளது.