Gilad Erdan | Israel Palestine War Damage (Photo Credit: @ANI / @DrEliDavid X)

அக்டோபர் 31, நியூயார்க் (World News): இஸ்ரேல் நாட்டை எதிர்த்து, பாலஸ்தீனியத்தை சார்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தி, இஸ்ரேலுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்தொடர்ச்சியாக, இஸ்ரேல் நாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து, அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய தரப்பில் 1400 மக்கள் உயிரிழந்த நிலையில், பெண்கள் பிணைய கைதியாக பிடித்து செல்லப்பட்டனர்.

ஒரு சிலர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளை கட்டாயம் கொன்று குவிக்க வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது வரை பாலஸ்தீனத்தில் உள்ள காசாநகரில் பல்முனை தாக்குதலை தீவிரப்படுத்தி பெரும் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் பதிலடியாக வழங்கியது.

இந்த பதிலடி தாக்குதலில் பாலஸ்தீனியத்தின் சார்பில் 7000க்கும் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐநாவிலும் இஸ்ரேல் தனது வாதங்களை முன் வைக்கும் நிலையில், பாலஸ்தீனியம் இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. Best Footballer 2023 Awards: 8 வது முறையாக சர்வதேச அளவில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் பெருமையை தக்கவைத்து மெஸ்ஸி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் கிளாட் ஏர்டன் (Gilad Erdan), ஐ.நா மன்றத்தில் பேசுகையில், "கடந்த 2007-இல் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய மக்களை அவர்களே தங்களது கைகளால் கொலை செய்தனர்.

பாலஸ்தீனிய மக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள மருத்துவமனை, பள்ளி வளாகங்களில் பயங்கரவாதத்திற்கான பொருட்களை பதுக்கி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?.

மருத்துவமனை மக்களுக்கு பயன்படும் என்ற போதிலும், அங்கு பயங்கரவாதிகள் தங்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள், உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து செயல்படுகின்றனர். தற்போதைய நிலவரப்படி அரை மில்லியன் லிட்டர் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எரிபொருள் பற்றாக்குறை விஷயத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை நோக்கி உங்களின் கோரிக்கைகள் இருக்க வேண்டும். உணவு மற்றும் தண்ணீர், மருத்துவ உபகரணம் உட்பட மனிதாபிமான பொருட்கள் தினமும் டிரக் போன்ற வாகனங்களில் செல்ல இஸ்ரேல் அனுமதித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸுக்கு எந்தவிதமான உதவியும் வழங்கப்பட மாட்டாது" என தெரிவித்துள்ளார்.