Donald Trump (Photo Credit @BhaniR46816 X)

ஜூன் 19, வாஷிங்க்டன் டிசி (World News Tamil): கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் (Israel Palestine War) தொடர்ந்து 2 ஆண்டுகள் கடந்து நடக்கிறது. பாலஸ்தீனியத்தின் ஹமாஸ் அமைப்பினரை (Hamas Group) ஒழிக்காமல் இஸ்ரேல் ஒருபோதும் ஓயாது என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹமாஸ் குழுவினருக்கு உதவி செய்ததாக ஈரான் மற்றும் லெபனான் நாடுகளில் எல்லை தாண்டிய தாக்குதலையும் பிரதமரின் உத்தரவின் பேரில் இஸ்ரேல் ராணுவம் (Israel Army) முன்னெடுத்து வந்தது. கடந்த வாரத்தில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பல அச்சுறுத்தல் வீடியோக்களை வெளியிட்டு வந்த ஈரானின் மீது பிராந்திய பாதுகாப்பு கருதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுத்தது. இஸ்ரேல் - ஈரான் போர்; ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் - வெளியுறவுத் துறை அறிவிப்பு..!

பதற்ற சூழல் அதிகரிப்பு:

இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் அபரீதமாக அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் (Israel - Iran War) சூழல் அபாயமும் உண்டாகியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்துள்ள ஈரானும், போரில் அமெரிக்காவின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வகையிலான எச்சரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று உயர் மட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலில் களமிறங்குவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான் போரில் அமெரிக்கா?

தாக்குதலுக்கான இறுதிக்கட்ட திட்டங்கள் அனைத்தும் முடிவெடுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஈரான் தானாக முன்வந்து அமெரிக்க நிலைகளை அல்லது இஸ்ரேலை கடுமையாக தாக்கினால், அணு ஆயுதத்தை கையில் எடுத்தால், அமெரிக்கா போரில் நேரடியாக களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான பதற்ற சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் பரிதவிக்கும் நிலை உண்டாகி இருக்கிறது. அதேநேரத்தில், இந்த போரின் தாக்கம் உலக அளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொடங்கினால் அழிவு நிச்சயம் என்பது உறுதி. ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்களை படிப்படியாக மீட்க இந்திய அரசும் ஆபரேஷன் சிந்து-வை (Operation Sindhu) செயல்படுத்திய நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.