மே 03, வாஷிங்க்டன் (World News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் (Washington, America), பேர்பாக்ஸ் கவுண்டி பார்க் வே (Fairfax County Parkway) சாலையில் காவலர் தனது வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற வாகனம் ஒன்றை இடைமறித்து சோதனை செய்துள்ளார்.
அந்த நேரத்தில், சாலையின் எதிர்திசையில் வந்த மற்றொரு கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை சாலைக்குள் புகுந்தது. எதிர்திசை சாலையில் வழுக்கியவாறு புகுந்த கார், காவலர் நிறுத்தி விசாரித்த காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. Bahuda River Bridge Collapsed: 70 டன் பாரம் ஏற்றி சென்ற லாரி; திரைப்பட பாணியில் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்..!
இதனை கவனித்துக்கொண்டு நொடியில் சுதாரித்த காவலர் நூலிழையில் லேசான மேல் காயத்துடன் தப்பினார். எதிர்திசையில் வந்த கார் காவலரால் நிறுத்தப்பட்ட கார் மற்றும் காவல் அதிகாரியின் வாகனம் மீதும் மோதி விபத்திற்குள்ளானது. விசாரணையில், 17 வயது சிறுவன் இயக்கி வந்த கார் தறிகெட்டு விபத்திற்குள்ளானது உறுதியானது.
இந்த விபத்தில் நல்ல வாய்ப்பாக யாவருக்கும் பெரிய காயம் இல்லை. விபத்தை ஏற்படுத்திய சிறுவன் லேசான காயமடைந்து இருந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்த வீடியோ காவலர் வாகனத்தின் டேஷ்கேமில் பதிவாகி இருக்கிறது. அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன.