ஜனவரி 22, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), 47 வது அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்றார். 45வது அதிபராக பணியாற்றியவர், 46 வது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 47வது அதிபர் தேர்தலில் களம்கண்டு வெற்றியடைந்து, நேற்று முன்தினம் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்கள், மூத்த தலைவர்கள், பிற நாட்டு அதிபர்கள் & பிரதமர்கள், தொழிலதிபர்கள் என பலர் முன்னிலையில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வேன் என வாக்குறுதி அளித்து இருக்கிறார். Taiwan Earthquake: தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு..!
புதிய திட்டங்களின் அறிவிப்பு:
இதனிடையே, அமெரிக்க அரசு நிர்வாகத்தால் முடக்கப்பட்ட டிக் டாக் மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் டிக் டாக் செயலிக்கு புதிய நிபந்தனையுடன் வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டிக் டாக் செயலியை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வாங்க வேண்டும் என நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அரசு ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார். மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா (Gulf of America) எனப் பெயர் மாற்றியுள்ளார். அலாஸ்காவின் 2000 அடி மலைக்கு, 2015ம் ஆண்டு அதிபர் ஒபாமா டெனலி மலை என பெயர் சூடிய நிலையில் மெக்கென்லி மலை என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டியுள்ளார். மேலும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
குடியுரிமை ரத்து:
ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. இச்சட்டம் (US birthright citizenship) அமெரிக்காவிலும் 1868ம் ஆண்டு முதல் அமலில் இருந்த நிலையில், பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இது, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்; கேரளவைச் சேர்ந்தவர் பலி.. வெளியான திடுக்கிடும் உண்மை.!
இந்தியர்களின் நிலை:
எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ள இந்தியர்கள் மற்றும் கிரீன்கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி தாமாக குடியுரிமை கிடைக்காது. தற்போது நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்காக 10 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு இந்த கொள்கை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் 54 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் 1.47% ஆகும். குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அமெரிக்க குடியுரிமைக்காகவே பலர் சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வது அதிகம். குறிப்பாக, மெக்சிகோ நாட்டவர்களும் இந்தியர்களுமே அதிக அளவில் இவ்வாறு அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.