பிப்ரவரி 08, வெள்ளைமாளிகை: அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் (US President Joe Biden) வாஷிங்க்டன் நகரில் உள்ள வெள்ளைமாளிகையில் (White House, Washington DC) தனது நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, "நான் அமெரிக்க அதிபராக பதவிக்கு வரும் முன் சீனா (China) தனது பலத்தை அதிகரித்தது, அமெரிக்கா (America) வீழுகிறது என்பது போன்ற கதை இருந்தது. ஆனால், அது இனி இல்லை. நாங்கள் போட்டியை விரும்புகிறோமோ தவிர்த்து மோதலை அல்ல என்பதை சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Xiping) தெளிவுபட புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் அமெரிக்காவை தொடர்ந்து வலிமையான நாடாக மாற்ற முதலீடுகளை செய்கிறோம். எங்களது கூட்டணியிலும் முதலீடுகள் செய்கிறோம். மேம்பட்ட தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறோம். இதனால் அவை நமக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தப்பட்டது. பல தசாப்தமாக உலக நாடுகளுடன் போட்டியிடும் வலிமையான நிலையில் நாம் இருக்கிறோம். RBI Announce Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் அதிகரித்தது ஆர்.பி.ஐ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
நமது இறையாண்மை விவகாரத்தில் சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், நாட்டினை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சீனாவுடன் கொண்டுள்ள போட்டியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உலகளவில் பல சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக ஜனநாயகம் வலுப்பெற்று இருக்கிறது. வன்முறை & துப்பாக்கி கலாச்சார (Gun Culture) குற்றங்களை குறைக்க அதிகளவிலான ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
கடந்த 1994ல் வன்முறையை ஊக்குவிக்கும் ஆயுதங்களை தடை செய்யும் போராட்டத்தை நான் முன்னெடுத்தேன். அந்த தடைச்சட்டம் அமலில் இருந்த 10 ஆண்டுகள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைந்து இருந்தன. குடியரசு கட்சியின் ஆட்சி பறிபோன பின்னர், துப்பாக்கி கலாச்சாரம் கடுமையாக அதிகரித்தது. நாங்கள் எங்களின் பணிகளை செய்துவிட்டு ஆயுதங்களின் தடையை தொடருவோம்" என்று பேசினார்.