IAF C17 Flight to Egypt, for Help Medi-Aid Palestine Peoples (Photo Credit: @ANI Twitter)

அக்டோபர் 22, புதுடெல்லி (New Delhi): இஸ்ரேல் அரசுக்கும் - ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் (Israel Vs Hamas Terror Group) இடையே, கடந்த அக்டோபர் 07ம் தேதி தொடங்கிய இன்றுவரை நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு எதிராக முதலில் ஏவுகணை (Missile Launch Attack) தாக்குதல் நடத்தி போரை தொடங்கியது.

மேலும், இஸ்ரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருக்கும் அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்தது. இதனையடுத்து, பதில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு, போரில் களமிறங்கிய இஸ்ரேலிய (Israel Military) அரசு தனது முழு ராணுவத்தையும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க களமிறக்கியது.

பாலஸ்தீனிய (Israel Palestine War) நாட்டில் உள்ள காசா (Gaza Strip) நகரம் முழுவதையும் பேரழிவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. காசா நகருக்குள் தரை வழியாகவும், ஏவுகணை தாக்குதல் மூலமாகவும் இஸ்ரேல் பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் கடுமையாக ஏற்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனியத்தின் காசா நகர் சிதைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், காசா நகரில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. தற்போது வரை இப்போரில் 4,385 பாலஸ்தீனியர்கள், 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Israel Army Spot on Palestine Border Near Gaza Strip (Photo Credit: @ANI, Reuters Twitter)

இந்த தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனியம் குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள இஸ்ரேல், "பயங்கரவாதிகள் எங்களை குறிவைத்து தாக்கும் முயற்சி தோல்வியுற்று, அவர்ளுக்குள் ஏற்பட்ட குளறுபடி ஏவுகணைகளை மருத்துவமனை நோக்கி பாய காரணமாக அமைந்தது. சொந்த நாட்டினுடைய மக்களையே ஹமாஸ் கொலை செய்துள்ளனர்" என்று தெரிவிக்கிறது.

இந்நிலையில், உலக நாடுகள் பாலஸ்தீனத்துக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. தொடர்ந்து இந்தியா தனது ஐஏஎப் சி 17 விமானத்தின் மூலமாக 6.5 டன் மருத்துவ பொருட்கள், 32 டன் பேரிடர் மீட்பு நடவடிக்கை பொருட்களை அனுப்பி இருக்கிறது. இந்த விமானம் எகிப்து நாட்டில் உள்ள அல் அரீஷ் (El-Arish) விமான நிலையத்தில் தரை இறங்கி, பின் அங்கிருந்து சாலை வழியாக உதவி பொருட்கள் காசா நகருக்கு அனுப்பி வைக்கப்படும்.