ஜூலை 23, பலுசிஸ்தான் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வரும் இளம் காதல்ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரி காதல் திருமணம் செய்துகொண்டதை விரும்பாத பெண்ணின் சகோதரர் பழங்குடியின தலைவரிடம் புகார் அளித்திருக்கிறார். Plane Crash: பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. ஒருவர் உயிரிழப்பு.! 

கொலை செய்து வீடியோ வெளியிட்ட பயங்கரம் :

இந்த புகாரின் பேரில் பழங்குடியின தலைவர் புதுமண தம்பதியை அங்குள்ள பாலைவனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின் இருவரையும் அந்த கும்பல் தலையில் கொடூரமாக சுட்டுக்கொன்று வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பான தகவலறிந்த காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பழங்குடியின தலைவரான ஷேர் பாஸ் சதசா என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமண ஜோடியை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி வீடியோ :