மார்ச் 28, புதுடெல்லி (New Delhi): இன்று அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் முதலிடம் வகிக்கிறது. இப்போது வாட்ஸ் அப் (WhatsApp) அலுவலகம், குடும்பம் என பல குழுக்களைக் கொண்டுள்ளது. அதில், நண்பர்கள் குழுக்கள் பொதுவாக எல்லா வகையான விஷயங்களைப் பற்றியும் விவாதிப்பார்கள். வாட்ஸ்அப் உலகம் முழுவதும் தனிப்பட்ட மட்டுமல்ல, தொழில்முறை வேலைகளுக்காகவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. Heroic MSF Staffer Saves Passenger: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி.. துணிச்சலாக ஓடி போய் காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்.. வைரலாகும் வீடியோ..!
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காக ஒன்றன் பின் ஒன்றாக பல அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இப்போது நிறுவனம் அதன் பயனர்களை ஒரு நிமிடம் நீளமான வீடியோக்களை ஸ்டேட்டஸாக வைக்க அனுமதிக்கும் அம்சத்தை கொண்டு வரவுள்ளது. அதுவும் இந்த புதிய சிறப்பம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இதற்கான வேலைகளை வாட்ஸ்அப் செய்து வருகிறது.