
மார்ச் 17, பெய்ஜிங் (World News): இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பிரத்தியேக பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டி, உலகளவில் கவனிக்கப்பட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம், இந்தியா - சீனா பிரச்சனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் தனது கருத்தை பகிர்ந்து இருந்தார். மேலும், இளைஞர்களின் வாழ்க்கைக்கான அறிவுரையையும் வழங்கி இருந்தார். இதனிடையே, இந்தியா - சீனா உறவுகள் தொடர்பான விஷயத்தில், நேர்மறையான கருத்துக்களை முன்னெடுத்து இருந்தார். இந்த விஷயத்தை பாராட்டி, டெல்லியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பெய்ஜிங் தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. How Safe is Dubai: அடேங்கப்பா.. துபாய் நாட்டில் பாதுகாப்பு எப்படி? வீடியோ ஆதாரத்துடன் பெண் நிரூபணம் செய்த காட்சிகள்.!
சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பாராட்டு:
சீனா - இந்தியா இடையேயான உறவு விரிசல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர், இரண்டு நாடுகளும் பிரச்சனையை சரி செய்ய ராஜாங்க ரீதியிலான அணுகுமுறையை முன்னெடுத்து வருகின்றன. உலகளாவிய முன்னேற்றம் மற்றும் வளமான உறவுகளுக்கு இந்தியா - சீனா ஒத்துழைப்புகள் அவசியம். இரண்டு நாடுகளும் ஒருமித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறது என கூறினார். இந்த விஷயத்தை பாராட்டிய சீன வெளிஉறவுத்துறை, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார். பிரதமர் மோடியின் கருத்துக்கள் பாராட்டுதலுக்குரியது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.