Affected Pigeon (Photo Credit: @wildbirdfund)

பிப்ரவரி 02: நமது வீடுகளில் நாம் அழகுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், நம்முடன் பேசி விளையாடவும் செல்லப்பிராணிகளை (Pets) வளர்ப்பது நடக்கும். நாய், பறவையில் தொடங்கி மீன் (Dog, Birds, Fish) என பல வகை செல்லப்பிராணிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். அவைகளை நாம் எதிர்பாராத சூழ்நிலையில் விடுதலை கொடுக்கிறோம் என நினைத்து பார்த்தால் என்னவாகும் தெரியுமா?.

அன்றைய நாட்கள் வரையில் அவைகளுக்கு நேரத்திற்கு சோறு கொடுத்து, நமது வீட்டிற்குள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கி வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் வெளியில் சென்றால் நெடிய போராட்டத்திலேயே வளரும் அல்லது இறக்கும் என்பதே நிதர்சனம். அதனை உணர்த்தும் சிறிய செய்தித்தொகுப்பு உங்களுக்காக. Budget 2023 – 24 Highlights: மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?… அசத்தல் அலசல் இதோ..!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் (NewYork, America) நகரில் வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் கல்வி மையம் தனது ட்விட்டர் பக்கத்தில், "புறாக்கள் பல வண்ணங்களில் வருகின்றன, ஆனால் இளஞ்சிவப்பு அவற்றில் ஒன்று அல்ல. இந்த ராஜா புறா வேண்டுமென்றே சாயம் பூசப்பட்டு விடுவிக்கப்பட்டது.

காடுகளில் உணவைக் கண்டுபிடிக்கவோ, நன்றாகப் பறக்கவோ அல்லது வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவோ முடியாத வீட்டுப் பறவைகளை வனப்பகுதிகளில் விடவேண்டாம். மேலுள்ள புறாவின் நிலைமை தொடக்கத்தில் முன்பு மிகவும் மோசமாக இருந்தது.

அந்த புறா இளம் வயதை விட அதிகமாக இல்லை. ஆனால் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் அதனிடம் தென்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒரு அன்பான நபர் அவரை மேடிசன் ஸ்கொயர் பூங்காவில் காப்பாற்றினார். அவர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். தயவு செய்து வீட்டுப் பறவையை காட்டுக்கு விடாதீர்கள்.

அது பட்டினியால் அல்லது வேட்டையாடப்பட்டு இறக்கும். முழு வெள்ளைப் புறாவை (அல்லது ஏதேனும் ஒரு நிறத்தில்) நீங்கள் கண்டால், அவை பயந்து தொலைந்து போனதைப் பார்த்தால், அதற்கு உதவி தேவை என்பதை புரிந்துகொள்ளுங்கள். தயவுசெய்து அதைப் பிடித்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்" என பதிவிட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 02, 2023 10:15 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).