பிப்ரவரி 02: இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையின் (Central Cabinet) ஒப்புதல் பெற்ற 2023 - 24ம் நிதியாண்டு பட்ஜெட் (Union Budget 2023-24) அறிவிப்புகளை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (NIrmala Sitharaman) வெளியிட்டார். 7 முக்கிய அம்சங்களை கொண்டு உருவாகியுள்ள பட்ஜெட்டில் பல துறைகள் முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவை குறித்த முக்கிய (Highlights Of Central Budget) அறிவிப்புகளை இன்று காணலாம்.
- இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பெண்கள், இளையோருக்கு என ரூ.10 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சுயதொழில் புரிந்துவருவோரின் மாத வருமானம் என்பது ரூ.58 ஆயிரம் வரை இருந்தால் வருமான வரி என்பது கிடையாது.
- இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகிறது.
- சிகிரெட், பித்தளை, வைரம், தங்கம் & வெள்ளியின் மீதான இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்படுவதால், அவையின் விலை மேலும் உயரும்.
- ஆண்டுக்கு மாத ஊதியத்தை அடிப்படையில் ரூ.7 இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. Building Collapsed: 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்.!
- செல்போன், கேமரா, தொலைக்காட்சி போன்றவற்றுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதி வாரியானது 2.5% குறைக்கப்படுகிறது.
- இந்தியாவில் உள்ள பல நகரங்களின் உட்கட்டமைப்புகளை கூடுதலாக மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- விவசாயிகளை தொடர்ந்து இயற்கையின் பக்கம் திருப்ப, பி.எம் பிராணம் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
- இந்திய இரயில்வே துறையை வளர்ச்சிப்பாதைக்கு தொடர்ந்து எடுத்து செல்ல ரூ.2.4 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் மேலும் புதியதாக 157 நர்சிங் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். எல்லையோர மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.