பிப்ரவரி 18, பல்கெரியா: சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா (Syria, Iraq, Afghanistan, Africa) போன்ற பல நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள், சொந்த நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் கருதி ஐரோப்பிய (Europe Union) நாடுகளில் சட்டவிரோதமாக அகதியாக நுழைந்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது நாட்டில் இருந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு துருக்கியில் (Turkey) இருந்து அதிகாரிகள் கண்களில் மண்ணைத்தூவி ஐரோப்பிய யூனியனிற்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் வருகையை சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள அதிகாரிகள் கண்காணித்தது தடுத்து வருகின்றனர். சட்டவிரோதமாக அவர்கள் பயணிப்பதால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. Edappadi Palanisamy Latest Speech: மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறுத்திய திமுக – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!
இந்த நிலையில், துருக்கி நாட்டில் இருந்து பல்கெரியா (Balkeria) நாட்டிற்குள் நுழைந்த கண்டைனர் (Container Lorry), ஆட்கள் இல்லாத பகுதியில் நின்றுகொண்டு இருந்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். அந்த கண்டைனர் லாரி தலைநகர் சோபியாவின் இருந்து 20 கி.மீ தொலைவில் இருந்துள்ளது.
ஓட்டுநர் இன்றி இருந்த கண்டெயினரை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, 52 பேர் மொத்தமாக அகதியாக (Migrate Peoples) பயணம் செய்தது அம்பலமானது. இவர்களில் 18 பேர் மூச்சுத்திணறி உள்ளேயே உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 34 பேரும் உயிருக்கு ஆபத்தான வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை (Afghanistan) சேர்ந்த மக்கள் அகதியாக துருக்கி, பல்கெரியா வழியே ஐரோப்பிய (Europe Union) நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் செயலில் ஈடுபட்டு, அவர்களில் 18 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவம் தற்போது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கெரிய காவல் துறையினர் 4 பேரை கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.