Edappadi Palanisamy at Erode By Poll Election Campaign (Photo Credit: Twitter).

பிப்ரவரி 18, ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை (Erode By Poll) தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் (AIADMK Candidate) வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் & முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) ஈரோட்டில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தலில் எப்படியேனும் வெற்றி அடைய வேண்டும் என அக்கட்சியினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று 3வது நாளாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து இராஜகோபால் தோட்டம், சூரம்பட்டி நான்கு ரோடு வரையில் நடைபெற்ற்ற தேர்தல் பரப்புரை (Campaign) கூட்டத்தில், வழிநெடுக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். Wedding Ceremony Cigarette: மருமகனுக்கு சிகிரெட்டை பற்றவைத்து வரவேற்ற மாமியார் – வைரலாகும் இன்ஸ்டா வீடியோவின் உண்மை இதுதான்.!

அப்போது அவர் பேசுகையில், "திமுக முதல்வர் மு.க ஸ்டாலின் (M.K Stalin), கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் எதுவும் மக்களுக்குகாக செயல்படுத்தவில்லை என பச்சையாக பொய்கூறி வருகிறார். கடந்த 21 மாத திமுக ஆட்சியில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஒரு திட்டம் கூற வரவில்லை. ஒரு பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

Erode By Poll Election Campaign (Visuals from Spot)

திமுக அமைச்சர்களே (DMK Ministers) வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரையில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் (Election Commission) இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. நான் முதல்வராக இருக்கையில் விதி எண் 110-ன் கீழ் 5 இலட்சம் முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு, 90 % நபர்களுக்கு அவை வழங்கப்பட்டன.

கடந்த 21 மாத திமுக ஆட்சியில் 7 இலட்சம் முதியவர்களுக்கு உதவித்தொகையை நிறுத்தி இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டில் 53 இலட்சம் மாணவ - மாணவியர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கினோம். தற்போது அதனை திமுக அரசு நிறுத்தியுள்ளது. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம்போன்று அதிமுக வழங்கிய திட்டத்தை அடுத்தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

சாதாரண மக்கள் பயன்பெறும் மின்கட்டணத்தை 54 % அளவு உயர்த்திவிட்டார்கள். இது அடுத்த 4 ஆண்டுகளில் 24 % அளவில் மேலும் உயரும். கடைவரி, வீட்டு வரி போன்றவையும் உயர்த்தப்பட்டுள்ளது. படித்த மக்கள், பாமர மக்கள் என அனைவரையும் ஏமாற்றி திமுக அரசாட்சிக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 18, 2023 09:16 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).