பிப்ரவரி 17, சோபியா (World News): மறைந்த பார்வையற்ற பல்கெரிய எதிர்கால கணிப்பாளர் என்று வருணிக்கப்படும் பாவா இவங்கா, தனது சிறுவயதில் பார்வையை இழந்தபின் இறைவனின் அருளால் எதிர்காலத்தை கணிக்கும் வல்லமை பெற்றார். இவர் எதிர்காலத்தில் நடக்கும் என்று கணித்துக்கூறிய பல்வேறு விஷயங்கள் சர்வதேச அளவில் நடந்து இருக்கின்றன. இதனால் அவர் கணித்து கூறிய விஷயங்கள் குறித்து உலக நாடுகள் எப்போதும் அச்சப்பட்டு நிற்கின்றன.
புற்றுநோய் மருந்து: 2024ம் ஆண்டுக்கான அவரின் கணிப்புகள் சமீபத்தில் தெளிவாகி வருகின்றன. அதனை உறுதி செய்யும்பொருட்டு சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டுக்கான கணிப்பில் அவர் பொருளாதார நெருக்கடி, ரஷியாவின் புற்றுநோய் உருவாக்கம் தொடர்பாக கூறி இருந்தார். தற்போது அவை உண்மையாகி வருகின்றன. Smartphone Use by Indians Report: நாளொன்றுக்கு 80 முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்; ஆய்வில் வெளியான முடிவுகள் இதோ.!
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் விரைவில் கேன்சர் நோயாளிகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்றும், சோதனைகள் வெற்றியாகும் நிலைக்கு வந்துவிட்டோம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புற்றுநோய்க்கு மருந்தே இல்லை என்ற நிலையில், தற்போது அதற்கான ஆரம்பட்டம் ரஷியாவால் எட்டப்பட்டுள்ளது.
பிற கணிப்புகள்: 2024ல் உலக பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் என்றும், கடன் அளவுகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக பிரச்சனை உண்டாகும் என தெரிவித்து இருந்தார். அதனை உறுதி செய்யும்பொருட்டு ஜப்பான் மற்றும் இங்கிலாந்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல, வானிலை ஆபத்துகள், இயற்கை பேரிடர்கள், சைபர் தாக்குதல்கள், போர் எச்சரிக்கை உட்பட பல விஷயங்களையும் இந்த ஆண்டில் நடக்கும் என கணித்து இருக்கிறார். ரஷ்ய அதிபரின் மீது உள்நாட்டு நபர் கொலை முயற்சி மேற்கொள்ளலாம் என கணிக்கப்பட்டுள்ளது.