Smartphones (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 17, புதுடெல்லி (Technology News Tamil): தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது கைகளில் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கையளவு உள்ள ஸ்மார்ட்போனில் (Smartphone), உலகளவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நாம் கண்டறிந்து வருகிறோம். இவ்வளர்ச்சி மனித குலத்தின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமாகிவிட்டது எனினும், ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது வெகுவாக அதிகரித்து, அதனை முறையாக கையாளாத நபர்களால் நேர செலவுக்கும் வழிவகை செய்கிறது.

80 முறை ஸ்மார்ட்போன் உபயோகம்: சமீபத்தில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் சார்பில் (Boston Consulting Group BCG) ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில், 84% நபர்கள் தாங்கள் உறக்கத்தில் இருந்து கண்விழித்த 15 நிமிடத்திற்குள் செல்போனை பயன்படுத்துகின்றனர். மொத்தமாக மக்கள் நாளொன்றுக்கு 80 முறை சாதாரணமாக தங்களின் ஸ்மார்ட்போன்களை (Indian Smartphone Use) உபயோகம் செய்கின்றனர். அதேசமயம், வீடியோ பார்ப்பது போன்ற விஷயங்களுக்காக 50% நேரத்தினையும் செலவிடுகின்றனர். HCA Action Against Head Coach Vidyuth Jaisimha: பேருந்து பயணத்தின்போதே அணியினர் முன் மதுபானம் அருந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்; விசாரணைக்கு உத்தரவிட்ட எச்.சி.ஏ.! 

Smartphones Use (Photo Credit: Pixabay)

பேச்சு குறைந்து பொழுதுபோக்கு அதிகரிப்பு: கடந்த 2010ம் ஆண்டு ஸ்மார்ட்போனில் 2 மணிநேரம் மட்டும் செலவழித்த இந்தியர்கள், தற்போது சராசரியாக 4.9 மணிநேரத்தை செலவு செய்கின்றனர். அன்று உரை மற்றும் அழைப்புகளில் பேசியவர்கள், இன்று சாட்டிங், கூகுளில் தேடல், செய்திகள் என இருக்கின்றனர். இதனால் 2010ம் ஆண்டு 100% அழைப்புகள், உரைகள் பேசப்பட்டது, 2023ல் 20 - 25% ஆக குறைந்து இருக்கிறது.

ரீல்ஸ் வீடியோ பார்க்கும் இளம் தலைமுறை: கேமிங், ஷாப்பிங், ஆன்லைன் பரிவர்த்தனை போன்ற விஷயங்களை 35 வயது நபர்கள் வரை பார்க்கின்றனர். அதே வேளையில் 18 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவற்றை பார்க்கின்றனர். தனக்கான தேவையான விஷயங்களை மேற்கொள்வதை காட்டிலும், பொதுக்குப்போக்குக்கு அதிகம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன.