ஏப்ரல் 26, புதுடெல்லி (New Delhi): உலகம் முழுவதையும் உலுக்கியதுதான் இரண்டாம் உலகப் போர் (World War II). இந்தப் போரின் முடிவில் ஒவ்வொரு நாடும் அதன் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றது. அதன்படி சோவியத் யூனியன் தனது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக அணு சக்தியில் முதலீடு செய்தது. குறிப்பாக சோவியத் யூனியனின் (Soviet Union) வளர்ச்சியானது அமெரிக்காவுடன்  (America) போட்டி போட்டது. இந்த இரண்டு நாடுகளும் விவசாயம் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டது.

வரலாறு: தொடர்ந்து சோவியத் விஞ்ஞானிகள் 1977 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆர்பிஎம்கே அணு உலைகளை தற்போதைய உக்ரேனின் பெலார்ரஸ் உடனான எல்லைக்கு தெற்கே அமைந்துள்ள மின் நிலையத்தில் நிறுவினர். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பி ஐ லெனின் அணுமின் நிலையத்தின் நான்காவது உலகில் வழக்கமான பராமரிப்பு நிகழ்வானது திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த சோதனையின் போது தொழிலாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாலும் சரியாக திட்டமிடப்படாத ஆராய்ச்சியாலும் நான்காம் ஆலைக்குள் உள்ள கலன்கள் அதீத வெப்பத்தை கக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அங்கிருந்த மின்சாரம் அதிகரித்து தீப்பற்றி எரிந்தது. Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.!

செர்னோபில் பேரிடர்: இதனால் அதிசக்தி வாய்ந்த அணு உலை வெடித்து சிதறியது. உடனடியாக அந்த உலையை முழுவதுமாக மூட அனைவரும் முயற்சித்தனர். ஆனால் மற்றொரு ஆலை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மொத்த அணுசக்தி மையமே வெடித்து கதிர் ஏக்கப் பொருட்களை கக்கியது. இதனால் அவ்விடத்தை சுற்றி இருந்த மரம் செடி போல் விலங்குகள் பறவைகள் என மொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் கருகி சாம்பலாகின. இந்த விபத்தினால் பல பேர் கதிர்வீச்சு நோய்க்கு ஆளாகி இறந்து போயினர். தொடர்ந்து சோவியத் யூனியன் அங்கிருந்த மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை வெளியேற்றியது. இந்த விபத்தை செர்னோப்பில் விபத்தாக (Chernobyl Disaster) அறிவித்தது. அந்தப் பகுதியை மக்கள் வாழ ஏற்ற பகுதி இல்லை என்று அறிவித்தனர்.

இன்றைய நிலை: இன்றுமே அந்தப் பகுதியில் வாழ்ந்தோர்களின் தலை முறைகள் கை கால் இல்லாமல், உடல் பாகங்கள் ஊனமுற்று பிறக்கின்றனர். இந்த செலோட்டில் பற்றி பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் என்று வெளிவந்தன. காலம் கடந்த இவ்விடத்தில் சில செடிகள் தற்போது வளர்கின்றன. சில வன விலங்குகளும் வளர்கின்றன. இருப்பினும் விஞ்ஞானிகள் இப்பகுதியில் உள்ள வனவிலங்கு இனங்களுக்கு இடையே சில குறைபாடுகள் இருப்பதனை கண்டறிந்துள்ளனர்.