Corona Virus (Photo Credit: who.int)

மே 16, சிங்கப்பூர் (World News): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) தொடர்ந்து உலகத்தையே ஆட்டி படைத்தது. இதனால் உலகமே ஊரடங்கு என்ற பெயரில் அடங்கிப் போனது. கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். பின் கொரோனா பாதிப்பு அனைத்தும் முடிவடைந்து, மக்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக இருந்து வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா:

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய ஆட்டம் துவங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதன்படி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நகரங்களின் பகுதிகளில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் முதல் வாரத்திலேயே சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. Mexican Influencer Shot Dead: டிக்டாக் நேரலையில் 23 வயது மாடல் அழகி சுட்டுக்கொலை.. ரசிகர்கள் ஷாக்..! 

எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை:

இதன் காரணமாக கிட்டத்தட்ட 14,200 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை மக்களுக்கு சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. அதன் படி கொரோனா பரவலை தடுக்க கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல், கொரோனா தடுப்பூசி முன்பே போட்டிருப்பதை உறுதி செய்தல் போன்றவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.