ஜனவரி 11, இலண்டன் (World News): இங்கிலாந்து நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாந் சிங், நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்-கை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, இந்தியா - இங்கிலாந்து நாடுகளின் உறவுகள் வரலாற்று மிக்க உறவுகளாக இருக்கிறது. அதனை நவீனமயமான உலகில், பன்முகம் மற்றும் பரஸ்பரம் நன்மை அளிக்கும் வகையில் கூட்டாண்மையாக மாற்றி மேலும் முன்னேற்றங்களை செய்துள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.
நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு: இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அமைதி, உலகளாவிய விதிகளின் ஒழுங்கை வலுப்படுத்த இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள், இந்தியாவுடன் இணைந்து கூட்டாக செயல்பட வேண்டும். இந்தியாவின் எழுச்சியில் இங்கிலாந்து கூட்டாக இருப்பது நட்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும், வேகப்படுத்தும். Ram Flag Sky Diving: 13000 அடி உயரத்தில் இருந்து, ராமர் கோவில் கொடியுடன் கீழே குதித்து சாகசம்; பெண் அசத்தல் செயல்.!
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும்: வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இங்கிலாந்து - இந்தியா ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்த விசயத்திற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சரின் கருத்துக்களை பிரதமர் சுனக்கும் ஒப்புக்கொண்டார். விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து, வெற்றிகரமாக அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு அவை எடுத்து செல்லப்படும் எனவும் இங்கிலாந்து பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராம் தர்பார் சிலை பரிசு: இந்தியா - இங்கிலாந்து உறவுகளின் பாதுகாப்பு என்ற தூண்களை வெளிப்படுத்தவும், அதன் மீதான ஆர்வத்தையும் இங்கிலாந்து பிரதமர் வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது, இங்கிலாந்து பிரதமர் சுனக்-க்கு ராம் தர்பார் சிலையினை பரிசாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் வழங்கினார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.