ஜனவரி 11, அயோத்தி (Ayodhya): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ரூபாய் 1800 கோடி செலவில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது ஜனவரி 22, 2024 அன்று திறப்பு விழாவுக்கு தயாராகி இருக்கிறது. இதனால் இந்திய அளவு மட்டுமல்லாது, உலக அளவில் இருக்கும் ராம பக்தர்கள் அயோத்தி நகரத்திற்கு வந்து குவிய தொடங்கியுள்ளனர்.
புத்துயிர் பெற்ற அயோத்தி மாநகரம்: அயோத்திக்கு மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் அயோத்திக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய இரயில்வே சார்பிலும் அயோத்திக்கு கூடுதல் இரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக அயோத்தி நகரமே மறுசீரமைப்பு செய்யப்பட்டு, மக்கள் வந்து செல்லும் இடங்கள் நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றன. FIR Against Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
பிரதமர் மோடி திரண்டு வைக்கிறார்: ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வந்து கோவிலை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். கும்பாவிஷேகத்திற்காக தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களையும் கோவில் நிர்வாகத்திடம் நேரடியாக வழங்க உள்ளனர்.
வானில் இருந்து குதித்து சாகசம்: திறப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ள இந்திய அளவில் பல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், திரைத்துறை பிரபலங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, வான் சாகச கலைஞர் அனாமிகா சர்மா, 13,000 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து ராமர் கோவில் திறப்பு விழா பதாகையை தனது கைகளால் ஏந்தி சாகசம் செய்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
Unfurling Ram flag 🚩 at 13000 feet in skydiving by Anamikahttps://t.co/PlVmtopmHw#Rammandir #AyodhyaSriRamTemple #jaishreeram #Ayodhya pic.twitter.com/j05LC4G0QW
— Shubham Rai (@shubhamrai80) January 11, 2024