ஏப்ரல் 11, ஆசியா (World News): காலநிலை மாற்றமானது உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதிலும் பூமி வெப்பமயமாதல் என்பதனை நம்மால் தாங்க முடியாமல் தவித்து வருகின்றோம். முன்னர் இருந்ததை விட இந்த ஆண்டு வெப்பமானது அதிகமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் அரசாங்கமானது 2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக கணித்துள்ளது. TN Weather Report: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையானது (United Nations) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு அதீத வெப்ப அலைகள் ஏற்படும் என்று அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் (East Asia and the Pacific region) உள்ள குழந்தைகள் இதனால் பாதிப்பார்கள் எனவும் ஐநா எச்சரித்துள்ளது. அது மட்டும் இன்றி காலநிலை மாற்றத்தினை 2050 ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்த தவறினால் உலகின் 200 கோடி குழந்தைகள் அதிக வெப்பநிலை பாதிப்புக்கு உள்ளாவார்கள் இன்று யூனிசெப் தனது ஆய்வில் கணித்துள்ளது.