ஏப்ரல் 18, டோக்கியோ (World News): ஜப்பான் நாட்டின் மேற்கு திசையில் உள்ள கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்கக்கூடிய பகுதிகளில் நேற்று இரவு 11.14 மணியளவில் கடும் நிலநடுக்கம் (Japan Earthquake) ஏற்பட்டுள்ளது. இது 6.3 ஆக ரிக்டர் அளவுகோலில் (Richter Scale) பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இருப்பினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கவில்லை. HC on Suicide Due to Love Failure: “காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துகொண்டால், பெண்ணை கைது செய்ய முடியாது” – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
இதனையடுத்து, வேறேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உவாஜிமா நகர் பகுதியில் 12 இடங்களில் தண்ணீர் குழாய்கள் வெடித்துள்ளன. மேலும், எஹிம் பகுதியில் உள்ள ஒசூ நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், பாறைகள் உருண்டு வந்து சாலைகளில் விழுந்து, போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதுபோல், ஒவ்வொரு ஆண்டும் 1500 நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்பட்டுள்ளன. இதில், பல நிலநடுக்கங்கள் லேசான பாதிப்பை ஏற்படுத்தும். இருந்தபோதிலும், ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் சாதாரணமாகவே நிகழ்ந்தவண்ணம் உள்ளன.