ஜூன் 21, நியூயார்க் (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) அழைப்பை ஏற்று, அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க் நகருக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) அமெரிக்காவாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பினை வழங்கினார்.
நியூயார்க் (NewYork) அரண்மனையில் பிரதமர் நரேந்திர மோடியை பலரும் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். இதற்கிடையில், ஸ்பேஸ் எக்ஸ் & டெஸ்லா (SpaceX & Tesla) நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க் (Elon Musk), இந்திய பிரதமரை நேரில் சந்தித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடையே தங்களது சந்திப்பு குறித்து பேசிய எலான் மஸ்க், "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மீது அக்கறை கொண்டுள்ளார். அவர் முதலீடுகளை கேட்கிறார். நான் அவரின் ரசிகன். இந்தியாவிற்கு சரியானதை செய்ய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.
அவர் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க விரும்புகிறார். நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். வெளிப்படையாக இந்தியாவிற்கு சாதகமாக இருக்கிறார். இந்திய பிரதமருடன் கொண்ட சந்திப்பு அற்புதமானது. நான் அவரை விரும்புகிறேன். எனக்கு அவரை பிடிக்கும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் எங்களின் தொழிற்சாலைக்கு வருகை தந்தார். இதனால் எங்களுக்குள் அறிமுகம் உண்டு. அடுத்த ஆண்டில் இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளேன். ஸ்டார் லிங்க் இனைய சேவையினை இந்தியாவிலும் கொண்டுவர நான் விரும்புகிறேன். ஸ்டார் லிங்க் சேவையினால் இந்தியாவில் உள்ள கிராமங்களிலும் இணையவசதி கிடைக்கும்" என கூறினார்.