மே 02, லண்டன் (World News): உலகளவில் ஆபாச படங்களை பார்க்க ப்ரீசர்ஸ், ட்ரிபிள் எக்ஸ், ஒன்லிஃபேனஸ் ஆகியவை இருக்கின்றன. இதில், ஒன்லி ஃபேன்ஸ் நிறுவனம் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து, அதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு ஆபாசமாக உள்ளடக்கங்களை காண்பிக்கும் பிரதான இணOnlyfans (Photo Credit @Only தளமாகும்.

சிறார் விவகாரங்களுக்கு எதிராக நடவடிக்கை: சமீபமாகவே அமெரிக்காவில் ஆபாச தளத்திற்கு எதிரான நடவடிக்கை பல மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறார் தொடர்பான ஆபாச வீடியோ ஒளிபரப்புகள் மற்றும் சிறார்களை ஆபாச உள்ளடக்கங்களில் இருந்து பாதுகாத்து வைத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

புதிய ஆன்லைன் சட்டத்தை பின்பற்ற வலியுறுத்தல்: அந்த வகையில், தற்போது ஒன்லி ஃபேன்ஸ் நிறுவனமும் இங்கிலாந்தில் தனது முதல் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணை இங்கிலாந்து அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் ஒன்லி ஃபேன்ஸ் தளத்தை அணுகும் போது, உரிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ள இங்கிலாந்து, தனது புதிய ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒன்லி பேன்ஸ் நிறுவனம் உடன்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. Cat Smuggle In Chennai: இரவு நேரத்தில் திருடப்படும் பூனைகள்.. சென்னையில் விற்கப்படும் பிரியாணியில் பூனைகளா?.! 

விதியை மீறியதா? என விசாரணை: வயது சரிபார்ப்பு நடவடிக்கைகள் போன்றவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறார்களை பாதுகாக்கும் வகையில் எந்த விதமான நடவடிக்கையும் ஒன்லி ஃபேன்ஸ் பக்கத்தில் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான சட்ட ரீதியான விசாரணைக்கு ஒன்லி ஃபேன்சி நிறுவனம் தற்போது தயாராகி வரும் நிலையில், அது தங்களின் விதியை மீறி செயல்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.5 பில்லியன் கோடி இலாபம்: கடந்த 2022 நவம்பர் 30 அறிவிப்புப்படி மொத்தமாக ஒன்லி ஃபேன்ஸ் நிறுவனம் 5.5 பில்லியன் டாலர் தொகையை வருமானமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட 16 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொகையில் பிற செலவுகள் போக 4.5 ஐந்து பில்லியன் டாலர் அவர்களுக்கு நிகர லாபமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.