ஆகஸ்ட் 15, புதுடெல்லி (Red Fort, New Delhi): ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டி, அனைவரையும் ஒன்றுதிரட்டி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெறப்பட்டது. இந்த சுதந்திரத்திற்காக ஒவ்வொரு இந்தியர்களும் பல தியாகங்களை செய்திருந்தனர்.
உலகளவில் வசித்து வரும் இந்தியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15 அன்று தங்களின் சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக சிறப்பித்து வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் இந்தியர்கள் புடைசூழ மூவர்ணக்கொடி ஏற்றப்படும். Tecno Price Updates: அசத்தலான வடிவமைப்பில், ஆச்சரியமூட்டும் விலையில் வெளியாகியிருக்கும் டெக்னோ மொபைல் போன்…!
அதேபோல, இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு, இராணுவத்தினர் மற்றும் மாநில வாரியான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். அந்த வீடியோ உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியராய் ஒவ்வொருவரும் பெருமைகொள்வோம், சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.
#WATCH | Prime Minister Narendra Modi hoists the National Flag at the Red Fort in Delhi, on #IndependenceDay pic.twitter.com/lO3SRCM7kZ
— ANI (@ANI) August 15, 2023