செப்டம்பர் 20, ஜார்ஜியா (World News): ஜார்ஜியா (Georgia) நாட்டை சேர்ந்த முதல் திருநங்கை மாடல் (Transgender Model) அழகியாக வெளிவந்தவர் கேசரியா அப்ரமிட்ஸே (வயது 37). இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொண்டார். மேலும், இவரை இன்ஸ்டாகிராமில் 5,00,000-க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். Israel-Lebanon War: லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. நாடு முழுவதும் பெரும் பரபரப்பு..!
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், கேசரியாவை (Kesaria Abramidze) கத்தியால் குத்தி படுகொலை (Murder) செய்துள்ளார். பின், அங்கிருந்து அந்த நபர் தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில், எல்ஜிபிடிக்யூ (LGBTQ) சமூகத்தினருக்கு எதிராக சட்டம் இயற்றிய மறுநாளே, திருநங்கை மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.