ஆகஸ்ட் 11, மொராதாபாத் (UttarPradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டம், சாம்பல், அலியா நேகபூர் கிராமப் (Sambhal, Moradabad) பகுதியை சேர்ந்தவர் அனுஜ் சௌதாரி (வயது 34). இவர் அப்பகுதியின் பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தனது சகோதரர் புனீத் என்பவருடன், அடுக்குமாடி குடியிருப்பு சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அந்த சமயத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் அனுஜை துப்பாக்கியால் சுட்டுள்ளது.
இதனால் நிலைகுலைந்துபோன அவர் கீழே விழுந்து உயிருக்கு போராட, அவரின் சகோதரர் புனீத் அனுஜை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், 3 பேர் கும்பல் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அனுஜை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதால், பதறிப்போன அவர் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார். No Confidence Motion Discussions: அனல் பறக்கும் விவாதங்களும், நாகரீகமற்ற செயல்பாடுகளும்.. பாரளுமன்றம் பராக்..!
நேற்று மாலை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், உடனடியாக அவர் சகோதரர் புனீத்த்தால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் பலன் இல்லை. அவரின் உயிர் வரும் வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அனுஜ் 17 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறார். அரசியல் ரீதியான விஷயங்களில் எப்போதும் மும்மரத்துடன் ஈடுபட்டு வந்த அனுஜ், சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடக்கும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் எதிர்கட்சிகளை கடுமையாக கண்டித்து பேசவும் செய்துள்ளார். Unchanged Repo Rates: மாற்றமின்றி தொடரப் போகும் ரெப்போ வட்டி விகிதம் – ஆர்பிஐ அறிவிப்பு.!
இதனால் அரசியல் நோக்கத்தில் கொலை நடந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து மொராதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹேம்ராஜ் மீனா, சாம்பல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் பதாவுரியா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுஜின் குடும்பத்தினர் அமித் சௌதாரி, அங்கித் உட்பட 3 பேரின் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் தலைமறைவாக இருக்கும் மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Warning: Disturbing video
In UP's Moradabad, a purported CCTV footage of 3 bike borne assailants shooting from point-blank range at local BJP leader Anuj Chaudhary out on walk has surfaced. Chaudhary succumbed to his injuries. pic.twitter.com/hi5jhOMcBW
— Piyush Rai (@Benarasiyaa) August 10, 2023