ஜூன் 28, லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels): அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த வாரம் முதலாகவே வெயில் கடுமையாக அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் சுமார் 55 மில்லியன் மக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள டெக்ஸாஸ், ஒக்லஹாமா, நியூ மெக்சிகோ (Texas, Oklahama, New Mexico) மற்றும் தென் மாகாணங்களில் கடந்த வாரம் முதலாக வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் அளவு வெயில் அடித்துள்ளது. மக்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் வகையில், மனிதர்களுக்கு பெரும் தீங்கை தரும் அளவு வெயில் டெக்ஸாஸில் வெளுத்து வாங்கியுள்ளது. டெக்ஸாஸில் உள்ள மிஸிஸிபி பள்ளத்தாக்கு மற்றும் ஆறு பகுதிகளில் கடுமையான வெயில் ஏற்பட்டுள்ளது. UBS Layoff: 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த UBS கிரெடிட் நிறுவனம்; வேலையை இழந்த சோகத்தில் ஊழியர்கள்.!
மேற்கு டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஏஞ்சலோ (San Angelo) பகுதியில் வரலாற்றில் முதன் முறையாக 114 பேரன்ஹீட் வெப்பம் இரண்டு நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல் ரியோவின் எல்லையில் 115 டிகிரி பேரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டது. தென்மேற்கு டெக்ஸாஸில் இருக்கும் பிக் பெண்ட் பகுதியில் 119 டிகிரி பேரன்ஹீடும், மாநிலத்தில் மொத்தமாக 120 டிகிரி பேரன்ஹீடும் பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 1994ம் ஆண்டு 120 டிகிரி பேரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் 2023ல் கிட்டதட்ட 29 ஆண்டுகளுக்கு பின்பு கடுமையான வெப்பம் அமெரிக்காவில் சுட்டெரித்து வருகிறது. டெக்ஸாஸ், மிஸிஸிபி, டெக்ஸாஸில் தென்பகுதிகள், கல்ப் பகுதியில் வெப்ப சூழல் தொடரும் என்றும், டெக்ஸாஸ், மெக்சிகோ மற்றும் அரிஸ்வ்னா, லூசியானா, மிசிசிபி, அலபாமா, புளோரிடா பகுதிகளில் கடும் வெப்பம் பதிவாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பமான நேரங்களில் மக்கள் தங்களின் தொலைதூர அல்லது சிறிய பயன்களை தவிர்க்குமாறும், தேவையான அளவு நீரை பருக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.