Amazon Ancient Village (Photo Credit: @zachtratar X)

ஜனவரி 14, பிரேசில் (World News): தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் அமேசான் மழைக்காடுகள் அமைந்துள்ளது. அமேசான் காடுகள் (Amazon Rainforest) வடமேற்கு பிரேசில், கொலம்பியா, பெரு உட்பட பல தென்னமெரிக்கா நாடுகளையும் இணைக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மலைக்காடுகளில் ஒன்றாக கருதப்படும் அமேசான், உலக வெப்பமயமாதல் உட்பட பல்வேறு காலநிலைகளை எதிர்கொண்டு இருக்கிறது.

வரலாறுகள் தொடக்கம்: அமேசான் பள்ளத்தாக்கு பகுதிகளில் வரலாறு சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கு வசித்து வந்த மக்கள், நகரங்களின் வடிவமைப்பு தொடர்பான விஷயங்களை ஆய்வுலர்கள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் அங்குள்ள உபானோ பள்ளத்தாக்கில் 3000 ஆண்டுகள் முந்தைய வீடுகள் மற்றும் அதனை இணைக்கும் சாலைகள் என ஒரு நகரம் மண்ணுக்குள் புதைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Bhogi Celebration in Tamilnadu: போகி பண்டிகையை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்: நடனம் ஆடி, பழையதை கொளுத்தி கொண்டாட்டம்.! 

தொழில்நுட்பத்தின் உதவியுடன் கன்டுபிடிப்பு: எரிமலையால் உருவாகிய அப்பகுதியில், பிற்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. தொலைநிலை உணர்திறன் நுட்பத்தின் மூலமாக அங்கு கிராமம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கட்டிடங்களின் மேற்பகுதிகட்டுமான அமைப்புகள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு இருக்கின்றன.

மனித நாகரீகம்: ஆறுகள் மற்றும அதனை ஒட்டிய வாழ்விடங்களில் மனித நக்ரீகம் தோன்றி வளர்ந்தது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அமேசானில் புழக்கத்தில் இருந்த கிராமம் தொடர்பான தகவலும் தற்போது தெரியவந்துள்ளது. அந்நகரில் மக்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறு, அவர்களுக்கு என்ன ஆனது? என்பது தொடர்பான வரலாற்று ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.