அக்டோபர் 08, ப்ளோரிடா (World News): அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் (Gulf of Mexico) உண்டான சூறாவளிக்கு மில்டன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மில்டன் சூறாவளி (Milton Hurricane) வேகமாக வலுவடைந்து ‘வகைமை-5’ பயங்கர சூறாவளியாக மாறியுள்ளது. இது மெக்சிகோ வளைகுடாவின் அண்மையில் உள்ள ப்ளோரிடா (Florida) மாகாணத்தின் மத்திய பகுதியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. Women Kicked Off Flight: க்ராப் டாப்ஸ் அணிந்ததற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்கள்.. பகீர் வீடியோ உள்ளே..!
வகைமை 5 சூறாவளி என்பதால் அதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் ஃப்ளோரிடாவிலிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஃப்ளோரிடா சாலைகளில் ஏராளமான வாகனங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தை விட்டு வெளியேறும் மக்கள்:
மில்டன் சூராவளி “ஐந்தாம் வகைமை”
(Cat 5) என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் புளோரிடா மாகாணத்தை விட்டு வெளியேறும் மக்கள். pic.twitter.com/wTT6MAUL0X
— G. Sundarrajan (@SundarrajanG) October 8, 2024