Zoho’s Arattai App Set for Big November Update (Photo Credit : @TimesNow X)

செப்டம்பர் 29, சென்னை (Technology News): இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho), 'அரட்டை' எனும் தனது புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும், இணையவேகம் குறைவாக இருந்தாலும் சிறப்பாக இயங்கும் வகையில் அரட்டை செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி தொடர்பாக ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், சிறந்த மற்றும் குறைந்த செலவில் உள்ள தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஜோஹோ நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிரிவித்துள்ளார். Arattai App: இனி வாட்ஸ்அப் அவ்ளோதானா?.. டெக் உலகை கவரும் ‘அரட்டை’ செயலி.. இந்தியாவின் அசத்தல் ஆப்.!

அரட்டை செயலி (Arattai App) :

அரட்டை என்பது தமிழில் 'Casual Chat' என பொருள்படும். இந்தியாவின் முன்னணி ஜோஹோ நிறுவனத்தின் புதிய தகவல் தொடர்பு செயலி அரட்டை ஆகும். அனைத்து பயனர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மேம்பாடுகள் இல்லாத பகுதிகளிலும் இதனை எளிமையாக உபயோகிக்கலாம். இதன் மூலம் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்களை விரைவில் பகிர முடியும். குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். கதைகள் பகிரவும், சேனல்களை நிர்வகிக்கவும் உதவுகிறது. இந்த செயலியானது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு 'மேட் இன் இந்தியா' (Made In India) என்ற சிறப்பை பெற்றுள்ளது. வாட்ஸ்அப்பை போல அல்லாமல் குறைந்த இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்குவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

அரட்டை செயலியின் எதிர்கால திட்டம் :

வாட்ஸ்அப், டெலிக்ராம் போன்ற செயலிகளுக்கு உயர்தர இணையவேகம் தேவைப்படுவதால் பயனர்களுக்கு சில சமயம் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அரட்டை செயலியை உபயோகப்படுத்துவதன் மூலம் பயனர்களின் அனுபவத்தை எளிதாக்கலாம். தனியுரிமை பாதுகாப்பை பொறுத்தவரையில் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை உறுதிப்படுத்துவதற்காக ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கு எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) வழங்கப்பட்டுள்ளது. உரையாடல்களுக்கு முழுமையான பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தவில்லை என்றாலும் விரைவில் அதனையும் கொண்டுவரும் பொருட்டு தயாராகியுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்கு போட்டியாக அரட்டை செயலியும் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரட்டை செயலி குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு :

ரிலீஸ் செய்வதற்கு முன் டிரெண்டான அரட்டை :

அரட்டை செயலி தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 'சுதேசி செயலி' என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் அரட்டை செயலியில் மிகப்பெரிய அப்டேட் செய்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்ததாக ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அரட்டை செயலியில் நாங்கள் இன்னும் சில வசதிகளை மேம்படுத்த இருந்தோம். அதன் திறனை விரிவாக்கம் செய்து, முக்கியமான சில அப்டேட்டுகளையும் செய்து பின் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், அது எதிர்பாராத விதமாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆகிவிட்டது" என தெரிவித்திருந்தார்.

விரைவில் மாஸ் அப்டேட்டுடன் களமிறங்கும் சுதேசி ஆப் :

மேலும் அரட்டை செயலியை உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி 3000-ல் இருந்து 3,50,000 ஆக உயர்ந்துள்ளது. எங்களது குழு குறைந்த நேரத்தில் பல்வேறு புதுப்பிப்புகளை செய்து வருகிறது. செயலியை உபயோகப்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாங்கள் இன்னும் பல விஷயங்களை அப்டேட் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'மேட் இன் இந்தியா' சாதனமாக உருவாக்கப்பட்டுள்ள அரட்டை செயலி அனைத்து பகுதிகளிலும் உள்ள பயனர்களுக்கான எளிமையான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் பல புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளோம். எங்களுக்கு நீங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். உங்கள் பொறுமைக்கு நன்றி. ஜெய் ஹிந்த்!" என தெரிவித்துள்ளார்.

அரட்டை செயலியின் நவம்பர் அப்டேட் குறித்து தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு :