ஜனவரி 11, அட்லாண்டா (World News): அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணம், அட்லாண்டா (Atlanta, Georgia) விமான நிலையத்தில் இருந்து, டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines) விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 757 (Boeing 757) ரக விமானம் 2668 ஒன்று, மின்னிபோல்ஸ் நகரின் விமான நிலையத்திற்கு, நேற்று உள்ளூர் நேரப்படி காலை 09:15 மணியளவில் புறப்பட்டது. விமானத்தில் விமானிகள், பணிப்பெண்கள் உட்பட 200 பேர் இருந்தனர். ஓடுபாதைக்கு சென்ற விமானம் மேலெழும்பு தயாரான போது, சில நொடிகளில் திடீரென எஞ்சினில் புகை வந்துள்ளது. தொழில்நுட்பக்கோளாறை உறுதி செய்த விமானி, உடனடியாக ஓடுபாதையில் விமானத்தை அவசர கதியில் நிறுத்தினார். Viral Video: பேருந்து இருக்கைக்காக நடுரோட்டில் சண்டையிடும் பெண்கள்.. வீடியோ வைரல்..!
200 பேரின் உயிர் தப்பியது:
மேலும், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்ற உத்தரவிடப்பட்டதில், விமானத்தின் 6 பக்கங்களில் இருந்து ஆபத்துக்கால மீட்பு கீழிறங்கும் ஏர்பலூன்கள் செயல்படுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிர்பயத்தில் மக்கள் தலைதெறித்து ஓடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. விமான எஞ்சின் கோளாறு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். விமானியின் சாதுர்ய நடவடிக்கையால் 200 பேரின் உயிர் தப்பி இருக்கிறது. விமானம் மேலெழும்பிய பின்னர் கோளாறு ஏற்பட்டு இருந்தால், அதனால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் சுமார் 100 கிமீ வேகத்தை அடைந்து இருந்த நிலையில், நல்வாய்ப்பாக விமானி விமானத்தை நிறுத்தி இருக்கிறார்.
விமானத்தில் இருந்து பயணிகள் பதறியபடி கீழிறங்கி தப்பிக்கும் காணொளி:
WATCH: Passengers evacuate Delta Air Lines plane via emergency slides after aborting take-off in Atlanta, Georgia; 4 passengers suffered minor injurespic.twitter.com/7JoXziKZnN
— BNO News (@BNONews) January 10, 2025