ஜூலை 07, ரஷ்யா (World News): ரஷ்ய நாட்டில் மக்கள் தொகை என்பது கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய சரிவு நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் தொகையை மீட்டெடுக்க நாட்டு அரசு, மாகாண அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தையும் சமீபத்தில் ரஷ்யா தொடங்கி இருந்தது. இதனால் பெரியவர்களும் பலனடைந்திருந்தனர். இந்நிலையில் இந்த திட்டமானது தற்போது பள்ளி மாணவிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறும் இளம் ரஷ்யர்கள் :
ரஷ்யாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் என்பது 2023 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.41 என்ற கணக்கில் இருந்தது. இந்த புள்ளி விகிதமானது முன்பு 2.05 இருந்த நிலையில், தற்போது இது குறைந்து வருவதால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளவயது கர்ப்பங்கள் குறித்த முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 43% நபர்கள் ரஷ்யாவின் புதிய கொள்கையை ஆதரித்திருக்கின்றனர். இதற்கிடையே இளம் ரஷ்யர்கள் நாட்டிலிருந்து வெளியேறியும் வருகின்றனர். World News: பாலைவனத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம்.. 13 குழந்தைகள் பலி., அமெரிக்காவில் சோகம்.!
மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க திட்டம் :
முன்னதாக ரஷ்யாவில் நடந்த ஸ்டாலினின் ஆட்சிகாலத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்க திட்டமிடப்பட்டது. கருக்கலைப்புக்கு எதிராகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரஷ்யா தயாராகி வரும் நிலையில், 2050 ஆம் ஆண்டுக்குள் 75% நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.