ஆகஸ்ட் 10, சாவோ பவுலோ (World News): பிரேசில் நாட்டில் உள்ள பரனா மாகாணம், காஸ்கேவேல் விமான நிலையத்தில் இருந்து சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்திற்கு 61 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று உள்ளூர் நேரப்படி 01:30 மணியளவில் வந்துகொண்டு இருந்தது. இந்த விமானம் 80 கிமீ தொலைவில் வடமேற்கு பகுதியில் வந்துகொண்டு இருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. WhatsApp Verification Tick: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்.. சரிபார்ப்பு பேட்ஜை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாற்ற முடிவு..!
தரையில் விழுந்து நொறுங்கி விபத்து:
காற்றில் அங்கும்-இங்குமாக தவழ்ந்த விமானம் ஏடிஆர் 72, குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 61 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விமானம் விபத்திற்குள்ளானபோது எடுக்கப்பட்ட பதைபதைப்பு காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 2007ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற விமான விபத்தில் 199 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 61 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
BREAKING: Voepass airline passenger plane has crashed in Vinhedo, Brazil pic.twitter.com/splmDIIhrc
— Insider Paper () August 9, 2024