மே 10, ரியோ டி ஜெனிரா (World News): பிரேசில் நாட்டில் உள்ள தெற்குப்பகுதியில் ஏற்பட்ட கடும் மழையை தொடர்ந்து, அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ரியோ ஜெராண்டே டூ சூல் (Rio Grande Do Sul) மாகாணத்தில் உள்ள பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கும் மக்கள் படகுகள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். Solar Storm Warning: இன்று பூமியை தாக்குகிறது சூரிய புயல்.. உலகுக்கே பேராபத்து?..! 

மீட்பு பணிகள் தீவிரம்: தற்போது வரை அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருப்பதால் மின்சார விநியோகமும் வழங்கப்படவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளின் மேல் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். படிப்படியாக அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீட்கப்படும் செல்லப்பிராணிகள்: இந்நிலையில், பிரேசில் மழை வெள்ளத்தில் சிக்கி உரிமையாளரை பிரிந்த நாய் ஒன்று மீண்டும் சில நாட்கள் கடந்து உரிமையாளரிடம் சேர்ந்தது. வயதான நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய்களுடன் மீட்புப்படை அதிகாரிகளால் படகு உதவியுடன் மீட்கப்பட்டார். இந்த நெகிழ்ச்சி தருணங்களை அங்குள்ள மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததை தொடர்ந்து வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Maikol Parnow (@mkparnow)

 

படகில் உரிமையாளருடன் மீட்கப்பட்ட செல்லப்பிராணி: