மார்ச் 06, வான்கூவர் (World News): மழை மேகங்கள் நம்மை சூழ்ந்து, மண்ணில் இருக்கும் ஒவ்வொரு உயிரை குளிர்வித்து, அதற்கான ஆதாரத்தை வழங்க வரும்போது இடி-மின்னல் ஏற்படுவது இயல்பானது. வளிமண்டலத்தின் சுழற்சியில், பூமியின் நிலப்பரப்பு அமைப்பை பொறுத்து மின்னல் தாக்குதல்கள் என்பது பல்வேறு விதமாக இருக்கும்.
வடமாநிலங்களவை மின்னல் தாக்குதல் இயல்பு: இந்தியாவை பொறுத்தமட்டில் இராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் உட்பட சில மாவட்டங்களில் பருவமழை காலங்களில் அதிக தாக்குதல்கள் நடக்கும். சமீபத்தில் கூட இராஜஸ்தானில் ஏற்படும் மின்னல் தாக்குதல் காரணமாக தொடர் மரணங்கள் ஏற்பட்டன. பள்ளிக்கு சென்று வந்த மாணவிகள், வயல்வெளியில் வேலை பார்த்த தம்பதி, சாலையில் நடந்து வந்தவர் என திடீர் மின்னல் தாக்குதலில் உயிர்கள் பரிதாபமாக பலியாகின.
விமானங்கள் மீதும் தாக்கும்: மின்னல்கள் நிலப்பரப்பை மட்டும் தாக்குவது மட்டுமின்றி, மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது அவ்வழியே பயணிக்கும் விமானங்களையும் தாக்குகின்றன. விமானங்கள் மின்னல் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனினும், சில நேரம் அவை தொழில்நுட்ப கோளாறுகளையும் சந்திக்க காரணமாக அமையும். Pondicherry Missing Girl: மாயமான 9 வயது சிறுமி சடலமாக மீட்பு; கஞ்சா குடிக்கி கும்பலால் நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்.!
தரையிறங்கிய விமானம்: கனடா நாட்டில் உள்ள ஒருசில நகரங்களில், அதன் நில அமைப்பு காரணமாக பருவகாலங்களில் மின்னல் தாக்குதல் இயல்பானது. இந்நிலையில், அங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், வான்கூவர் நகரின் (Vancouver International Airport) சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்க தயாரானது.
திடீர் மின்னல் தாக்குதல்: நடுவானில் இருந்து கீழே இறங்கிக்கொண்டு இருந்த விமானத்தை திடீரென மின்னல் ஒன்று தாக்கியது. நல்வாய்ப்பாக எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்பதால் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பயணிகளில் ஒருசிலர் பதற்றத்திற்கு உள்ளாகினர். அவர்கள் விமான குழுவினரால் அமைதிப்படுத்தப்பட்டனர். இந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் எதிர்பாராத விதமாக படம்பிடிக்கப்ட்டது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
WATCH
A remarkable video captures the moment a plane is hit by lightning while approaching Vancouver International Airport. pic.twitter.com/ATXK7y521K
— Insider Corner (@insiderscorner) March 5, 2024