ஏப்ரல் 28, குவாங்சூ (World News): சீனாவில் உள்ள குவாங்சூ மாகாணம், பையுன் (Baiyun) மாவட்டத்தை நேற்று கடுமையான சூறாவளி ஒன்று தாக்கியது. இந்த சூறாவளியின் (Guangzhou Tornado) காரணமாக அங்கிருந்த பல குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் மேற்கூரைகள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க இயலாமல் பிய்த்து எறியப்பட்டன. பல இடங்களில் மின்சார சேவை என்பது கடுமையாக பாதிக்கப்பட்டது. கடும் மின்னலும் அம்மாவட்டத்தை தாக்கிய காரணத்தால், உயர் மின்னழுத்த கோபுரங்கள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட 141 தொழிற்சாலைகள் முற்றலும் சேதமடைந்து இருக்கின்றன என மீட்புப்படை தகவல் தெரிவித்துள்ளது. Lorry Tractor Collision: டிராக்டரின் மீது மோதிய லாரி; 3 வயது சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி.. தந்தையின் கண்முன் துயரம்.! 

நேரடி காணொளிகள் வெளியீடு: சூறாவளி அம்மாகாணத்தை கடந்து சென்றதும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்ற நிலையில், சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 12 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தோர் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த நேரடி காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவை உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.

சூறாவளி தாக்கிய காட்சி:

சூறாவளி மற்றும் மின்னல் காரணமாக சேதமடைந்த உயர் மின்னழுத்த கடத்திகள்: