டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): இந்திய அளவில் மிகப்பெரிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருப்பது அமுல் (Amul). இந்நிறுவனம் 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 72 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
சீஸ் விளம்பரங்கள்: இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் சார்பில் சீஸ் ஒன்று தயாரிக்கப்பட்டு புதிதாக விற்பனைக்கு வெளியிடப்படுவதாக விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இதனைக்கண்ட அமுல் நிர்வாகம், சீஸ் விற்பனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. X- Twitter Down: சர்வதேச அளவில் முடங்கியது எக்ஸ் (ட்விட்டர்): பயனர்கள் அவதி.!
அமுல் விளக்கம்: மேலும், தாங்கள் இது சார்ந்த எவ்விதமான விளம்பரமும் பதிவு செய்யவில்லை. நமது நிறுவனத்தின் சார்பாக மேற்கூறிய சீஸ் உற்பத்தி செய்யப்படவும் இல்லை. ஆகையால், இந்த விளம்பரத்தை நம்ப வேண்டாம்.
எடிட் செய்யப்பட்ட போலி பதிவு வைரல்: இது ஏஐ தொழில்நுட்பத்தை உபயோகம் செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமுல் நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை பகிர வேண்டுகோள் வைக்கிறோம் என்று அமுல் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ISSUED IN PUBLIC INTEREST BY AMUL pic.twitter.com/VjDQXtE6VF
— Amul.coop (@Amul_Coop) December 20, 2023