Ibrahim Biari, Commander of Hamas (Photo Credit: X)

நவம்பர் 01, ஜெருசலேம் (World News): அக்.07ம் தேதி இஸ்ரேல் நாட்டை எதிர்த்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் போர் அறிவிப்பை வெளியிட்டு தாக்குதல் நடத்தினர். ஹமாஸின் தாக்குதலில் 1400 இஸ்ரேலிய மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

பெண்கள் பிணையக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டு கொடுமைகளை சந்தித்தனர். 40 க்கும் மேற்பட்ட அப்பாவி பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டன. இஸ்ரேல் எல்லையில் இருக்கும் ஜீவிஷ் மாகாணத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து, அவர்களை கொலை செய்து தலையை துண்டித்து வைத்து சென்றனர்.

இதனையடுத்து, பதிலடி கொடுக்கும் விதமாக போரில் களமிறங்கிய இஸ்ரேலிய படையினர், காசா நகரில் இருக்கும் மக்களை வெளியேறச்சொல்லி அங்கு ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அதனைத்தொடர்ந்து பல்முனை தாக்குதல் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Thangalaan Teaser: தங்கலான் படத்தின் அசத்தல் டீசர் வெளியானது; இரத்தம் தெறிக்கத்தெறிக்க பரபரப்பு காட்சிகள்.! 

ஹமாஸ் பயங்கரவாதிகளை முழுவதுமாக ஒழிக்கும் வரையில் தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. தற்போது வரை இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் 8,400 க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்.

உயிருடன் எஞ்சியுள்ளோர் அனைவரும் ஐ.நாவின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு எவ்வித தாக்குதலும் இஸ்ரேலின் சார்பில் நடத்தப்படாது. பாலஸ்தீனிய மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமான மருத்துவ, உணவு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றன.

இந்நிலையில், அக்.07 நடந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி இப்ராஹிம் பியரி (Ibrahim Biari) வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் இருந்த பிற பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.