மே 11, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு, வெளிநாடு மற்றும் உள்நாடுகளை சேர்ந்த பயணிகள் வந்துசெல்வது இயல்பு. பெரும்பாலும் வெளிநாடு சென்று தாயகம் திருப்புவோரில் சிலர், சட்டவிரோத கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தங்கம் போன்ற பொருட்களை கடத்தும் செயலில் ஈடுபடுவதும் உண்டு. தங்கத்தை கடத்த கும்பல் பல விதமான யோசனைகளை செயல்படுத்தினாலும், சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கண்டறிந்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். Aurora in Iceland: காணக்கிடைக்காத அரோரா நிகழ்வு.. வானின் விந்தையில் மிகப்பெரிய வியக்கவைக்கும் நிகழ்வின் வீடியோ உள்ளே.! 

ரூ.7.44 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: இந்நிலையில், மும்பை விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கடந்த மே 07ம் தேதி முதல் மே 09ம் தேதி வரை 2 நாட்களில் தங்கத்தை கடத்தி வந்ததாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான செயலில் ஈடுபட்ட நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 11.62 கிலோ அளவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.7.44 கோடி ஆகும்.

ஆசையாக பேசி வலைவிரிக்கும் கும்பலிடம் சிக்காதீர்: இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகம் என்பதால், அதனை வணிகரீதியாக அதிகளவு கடத்தி இந்தியாவுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்ய என்னும் கும்பலில் ஒருவர் கைதானாலும் மற்றொருவர் என கிடைப்போரிடம் தரகுபேசி இவ்வாறான சர்ச்சை செயல்கள் தொடருகின்றன. வெளிநாடு சென்று திரும்பும்போது கடத்தலில் செயலில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கி அதிக பணத்திற்கு ஆசைப்பட்டால், விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் சூழலும் உண்டாகும்.