மே 10, நியூயார்க் (World News): அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில், பல நாடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு அகதிகளாக குடிபெயரும் நபர்களும் அடைக்கலம் தேடுவதால், நியூயார்க் மாநகர அரசு மக்கள் தொகையை தவிர்க்க இயலாமல் திணறி வருகிறது. இதனால் நகரின் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Solar Storm Warning: இன்று பூமியை தாக்குகிறது சூரிய புயல்.. உலகுக்கே பேராபத்து?..! 

பெண்ணுக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடுமை: இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் பகுதியில் அடையாளம் தெரியாத முகமூடி அணியப்பட்ட மர்ம நபரால் 45 வயது பெண்மணி கழுத்தில் துணி கட்டப்பட்டு இழுக்கப்பட்டார். பதற்றத்தில் சில நொடிகளில் மயங்கிய பெண்ணை காருக்கு முன்புறம் மறைவாக இழுத்துச்சென்ற நபர், அவரை பாலியல் ரீதியாகவும் மயக்க நிலையில் வைத்து துன்புறுத்தி இருக்கிறார். பெண்மணி மர்ம நபரால் இழுத்து செல்லப்படும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த துயரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மே மாதம் 01 ம் தேதி அதிகாலை 03:00 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.