Nigeria Blast (Photo Credit: @MarioNawfal X)

ஜனவரி 19, சுலேஜா (World News): நைஜீரியா நாட்டில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பெட்ரோல் சேகரிக்கச் சென்ற பொதுமக்கள் சுமார் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நேற்று உள்ளூர் நேரப்படி, மாலை நேரத்தில் பெட்ரோல் எரிவாயு ஏற்றிக்கொண்டு லாரி வந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறது. Vidaamuyarchi Pathikichu Lyric Song: விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற பத்திக்கிச்சு பாடல் வெளியீடு; வீடியோ லிங்க் உள்ளே.! 

70 பேர் பலியான சோகம்:

எரிவாயு டேங்கர் விபத்தில் சிக்கியதால், அதில் இருந்து கசிந்த பெட்ரோலை பிடிக்க மக்கள் முற்பட்டு இருக்கின்றனர். அச்சமயம், எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து ஏரியவே, அதனை சுற்றி இருந்த மக்கள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். ஜெனரேட்டர் பம்ப் கொண்டு வேறொரு வாகனத்தில் பெட்ரோலை நிரப்பும் முயற்சியில், தோல்வி ஏற்பட்டு அது வெடி விபத்தாக மாறி இருக்கிறது. நைஜீரியாவை பொறுத்தவரையில் எரிவாயு டேங்கர் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. விபத்தில் சிக்கும் எரிவாயு இணைப்புகளில் இருந்து எரிபொருளை திருட முற்பட்டு, மக்கள் பலியாகுவது தொடருகிறது.

70 பேரின் உயிரை பறிக்க காரணமாக இருந்த பெட்ரோல் டேங்கர் விபத்து: