Axe / Horror File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 12, லாகூர் (World News): வளர்ந்து வரும் நாடுகளில் வறுமையின் கோரப்பசி பல அப்பாவி உயிர்களை பறித்துள்ளது எனினும், வரவு தெரியாமல் செலவு செய்தால் கஷ்டம் என்றும் மாறாது. அதேபோல, தனது ஆசைக்காக மனைவியை ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பமாக்கி 7 குழந்தைகளை 10 ஆண்டுகளுக்குள் பெற்ற நபர், தனது குழந்தைகளுக்கு (7 Children and Mother Kills by Father in Pakistan) உணவளிக்க இயலாமல் கஷ்டப்பட்டுள்ளார். இறுதியில் அவர் பித்துபிடித்த நபரை போல மாறி, குடும்பத்தையே கொலை செய்த பயங்கரம் பாகிஸ்தான் நாட்டை பதறவைத்துள்ளது.

7 குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை: பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணம், முஸாபர்கர்க் மாவட்டம், அலிபூர் பகுதியை சேர்ந்தவர் சஜ்ஜத் கஹோகார் (வயது 45). இவரின் மனைவி கௌஸர் (வயது 42). தம்பதிகள் இருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் இல்லறத்திற்கு அடையாளமாக அடுத்தடுத்து என 7 குழந்தைகள் பிறந்துள்ளார். இவர்களில் 4 மகள்கள், 3 மகன்கள் அடங்குவார்கள். மூத்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது, இறுதியாக பிறந்த குழந்தைக்கு 8 மாதங்கள் ஆகின்றன. IIT Student Suicide: ஐஐடி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவர்; மன அழுத்தத்தால் 20 வயதில் நடந்த சோகம்.! 

Crime Scene with Knife File Pic (Photo Credit: Pixabay)

அளவுக்கு மீறிய பிள்ளை செல்வங்களால் வருமான சிக்கல்: கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சஜ்ஜத், குடும்பத்தை நடத்த போதுமான வருமானம் இன்றி சிக்கலில் தவித்து இருக்கிறார். இதனால் எந்நேரமும் பித்து பிடித்தார் போல அலைந்து வந்துள்ளார். இது பின்னாளில் குடும்பத்திற்குள்ளும் நிம்மதியின்மையை ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வப்போது தனது மனைவியிடமும் சஜ்ஜத் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஆவேசத்தில் உச்சத்திற்கு சென்றவர், வருமான ரீதியான பிரச்சனையை சமாளிக்க விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, வீட்டில் இருந்த கோடரியால் தனது மனைவி மற்றும் 7 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். Health Tips for Eating Foods: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எது?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., மறந்தும் சாப்பிடாதீங்க.! 

குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாததால் நடந்த கொடூரம்: பச்சிளம் குழந்தைகள் முதல் மனைவி வரை ஈவு இரக்கமின்றி அனைவரையும் கொலை செய்தவர், குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாத காரணத்தால் அவர்களை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சஜ்ஜத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. இக்கொலை குறித்து தகவல் அறிந்த அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தனது இரங்கலையும் தெரிவித்தார்.