
ஜூன் 30, தன்சானியா (World News Tamil): ஆப்பிரிக்காவில் உள்ள தன்சானியா நாட்டின் கிளிமஞ்சரோ மோனி டாங்கோ சாலையில் சபாசாபா பகுதியில் இருந்து 2 பயணிகள் பேருந்து எதிரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்து இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. Trending Video: இரயிலுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த முதியவர்.. அலறித்துடித்த பயணிகள்.!
தீ விபத்தில் 40 பேர் உடல்கருகி பலி :
இதனால் பயணிகள் விபத்தில் சிக்கி வெளியே வர இயலாமல் தவித்துள்ளனர். இதனை அடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் தீப்பிடித்த பேருந்தில் தீயை அணைத்து அதில் பயணம் செய்தவர்களை மீட்டனர். பேருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் என 40 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலை மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த பேருந்து :
மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. திருமண விழாவுக்கு சென்று கொண்டிருந்த நபர்களின் பேருந்து டயர் பஞ்சரானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து, எதிர் திசையில் வந்த மற்றொரு பேருந்து மீது மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.