Fish Bone Stuck in Women's Neck (Photo Credit : @TimesNow X)

ஜூலை 02, தாய்லாந்து (World News Tamil): தாய்லாந்து நாட்டில் வசித்து வருபவர் சூரியன் பப்பா (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவத்தன்று இவரது மனைவி மீன் சூப் (Thailand Fish Soup) கேட்டதால் அவரும் வாங்கியிருந்த நிலையில், மீன் சூப் குடித்தபோது மீன் முள் ஒன்றையும் அவர் விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் முள் தொண்டையில் சிக்கிக்கொண்ட நிலையில் அவருக்கு கடும் வலி ஏற்பட்டுள்ளது. Israel Gaza War: பள்ளி, மருத்துவமனையில் குண்டுவீச்சு.. 85 பேரின் உயிரைப்பறித்த பயங்கரம்.. கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்.! 

மீன் சூப் குடித்த பெண்ணின் கழுத்தில் சிக்கிய முள் :

அதனை சரி செய்ய அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு மீன் முள்ளை வெளியேற்ற முயற்சி செய்துள்ளார். அதில் பலன் கிடைக்காத நிலையில் வாந்தி எடுக்க முற்பட்டும் பலனில்லை என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து நேரம் செல்லச்செல்ல அவருக்கு வீக்கம் ஏற்படவே, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர்கள் :

அப்போது அவரது தொண்டையில் மீன் முள் சிக்கியது உறுதிசெய்யப்பட்டு, அதனை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருக்கும் நிலையில், இந்த விஷயம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவரது கணவர், உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் மீனில் உள்ள முள் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் கொண்டவை ஆகும். அதனால் மீன் சாப்பிடும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அது அறுவை சிகிச்சை வரை செல்லலாம் என அறிவுரை கூறியுள்ளார்.