Israel Bombs School (Photo Credit : @MTaglabout X)

ஜூலை 01, ஜெருசலேம் (World News Tamil): இஸ்ரேல் - பாலஸ்தீனம் (Israel Gaza War) இடையே நடந்து வரும் போரை கைவிட வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தாலும், தங்களின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை எங்களது தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால் காசாவில் வாழும் அப்பாவி பொதுமக்களும் தாக்குதலின் பெயரில் கொல்லப்பட்டு வருகின்றனர். காசாவில் வசித்து வரும் மக்களுக்கு உலக நாடுகள் முன்வந்து அடிப்படை உதவிகள் செய்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதையும் தடுத்து நிறுத்தி வருகிறது. பேருந்து நேருக்குநேர் மோதி பயங்கரம்.. 40 பேர் உடல்கருகி துடிதுடித்து பலி.! 

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் :

ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் பேரில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் (Israel Bombs Hospital) போன்ற இடங்களிலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கூறி தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் அப்பாவி பொதுமக்களும் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். காசா நகரில் நடந்த ராக்கெட் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.

கொத்துக்கொத்தாக பலியான மக்கள் :

மத்திய காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த 4 பள்ளிகளில் நடந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறாக காசாவில் திங்கட்கிழமை மட்டும் நடந்த தாக்குதலில் 85 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை அங்கு மொத்த பனி எண்ணிக்கையானது 55 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுவீச்சுக்கு பின் எடுக்கப்பட்ட வீடியோ :